ஆவடி குமார் சிறைபிடிப்பு: காரில் பணம் கடத்தியதாக பறக்கும் படை அதிரடி!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (19:38 IST)
அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமார் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக காரில் பணம் கடத்தியதாக பறக்கும் படை அதிகாரிகள் அவரை சிறைபிடித்து விசாரித்து வருகின்றனர்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதே நேரத்தில் பணப்பட்டுவாடா அதிகமாக நடப்பதாக புகார்களும் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் தேர்தல் ஆணையம் மிகத்தீவிரமாக இந்த தேர்தலை கண்காணித்து வருகிறது.
 
இந்நிலையில் இன்று மாலை ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளரான ஆவடி குமார் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய தனது காரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்தியதாக புகார் எழுந்தது.
 
இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகள் ஆவடி குமாரின் காரை தேர்தல் சோதனையிட்டு, அவரிடம் விசாரணை நடத்திவருகிறார். இதனால் அந்தப்பகுதியில் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து பேசிய ஆவடி குமார், டிடிவி தினகரன் தரப்பு வேண்டுமென்றே தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக கூறினார். மெலும் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றார் ஆவடி குமார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்