ஜெ.வின் மரணம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதன் பின் நடவடிக்கையில் இறங்கிய ஆறுமுகசாமி ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, தீபக் உட்பட 60க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பினார்.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் தொலைக்காட்சி ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த போது ஆளுநர் அவரை கண்ணாடி அறைக்கு வெளியே நின்று பார்த்தார். அப்போது ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என கூறினார். அதோடு, அந்த நேரத்தில், தான் மருத்துவமனையில்தான் இருந்ததாகவும், அப்போது ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்ததாக கூறினார். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே சுயநினைவோடு இருந்ததாக தீபக் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.