பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதம்.! இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார்.!!

Senthil Velan
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (13:15 IST)
தனியார் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
 
கடந்த 13 ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் நடிகரும் இயக்குனருமான சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக அளவு சத்தத்துடன் ஒலி எழுப்பிக் கொண்டே வந்ததார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சேரன் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதிக ஒலி எழுப்பிய பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஒதுங்குவதற்கும், வழி விடுவதற்கும் இடமில்லாத இடத்தில் தொடர்ந்து இவ்வாறு சக வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பேருந்துகளை இயக்கும் பேருந்துகள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ALSO READ: புதுச்சேரியில் வேளாண் கடன் ரூ.13.36 கோடி தள்ளுபடி.! சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!
 
இந்நிலையில் இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பேருந்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளுடன் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்