பரந்தூர் விமான நிலைய பணி பாதிப்புக்கு திமுக தான் காரணம்: அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:35 IST)
பரந்தூரில் அமையவிருக்கும் இரண்டாவது விமான நிலைய பணிகள் பாதிப்புக்கு திமுக அரசே காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 
 
பரந்தூரில்  இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டுள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திமுக அரசுதான் இடங்களை தேர்வு செய்தது என்றும் திமுக அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால்தான் விமான நிலைய பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
 
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு திமுக அரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்