அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

Siva
புதன், 25 டிசம்பர் 2024 (18:58 IST)
அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் சற்று முன் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வளாகம் முழுவதும் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை காரணமாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நாளை வழக்கம் போல் பல்கலைக்கழகம் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதை அடுத்து, நாளைய அட்டவணைப்படி தேர்வுகள் நடக்கும் என்றும், விடுமுறை இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்