அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (14:12 IST)
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உதவி ஆணையர் பாரதிதாசன், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது குறித்தான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
 
மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ், விசாரணையில் உள்ள நபரை மாணவி உறுதி செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
 
மேலும் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மாணவி வன்கொடுமை சம்பவத்தை விசாரணைக் குழு அண்ணா பல்கலைக்கழகம் அமைத்து விசாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்