அண்ணா சிலைக்கு செருப்பு மாலை! – விழுப்புரத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (12:27 IST)
விழுப்புரத்தில் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்து மத அமைப்புகள் பல அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன. பாஜக உள்ளிட்ட கட்சிகளும் ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.

ALSO READ: ஓலா கார், ஆட்டோ கட்டணம் திடீர் உயர்வு! – அதிர்ச்சியில் பயணிகள்!

அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆ.ராசா ஆதரவாளர்கள், இந்து மத ஆர்வலர்கள் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், திமுகவின் ஸ்தாபகருமான அறிஞர் அண்ணாவின் சிலையை திமுக கொடியால் தலையை மூடிய மர்ம ஆசாமிகள், செருப்பு மாலை அணிவித்து, ஆ.ராசாவின் படத்தையும் கருப்பு புள்ளி குத்தி மாட்டி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்