வட தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் !

Webdunia
வியாழன், 21 மே 2020 (15:47 IST)
வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுதிய அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையைக் கடந்து விட்ட நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதனா வட தமிழகப் பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. எனவே, அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழக மக்கள் காலை 11 மணிமுதல் மூன்று முப்பது வரை வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்