அமமுக - அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (13:04 IST)
அமமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இன்று எம்எல்ஏ மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மகன் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். மேலும் இந்த திரைப்படத்தில் ஓ பன்னீர்செல்வம் உள்பட பல அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொள்ள இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. 
 
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில் டிடிவி தினகரன் பேசிய போது அமமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது என்றும் சிலரின் பேராசையினால் கனத்த இதயத்தோடு அமமுக  என்ற கட்சியை தொடங்கினோம்.
 
இப்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். அம்மாவின் ஆட்சி அமைக்க நாங்கள் மீண்டும் இணைந்து உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்