தமிழகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுகிறதா? மின்சார வாரியம் தகவல்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (12:49 IST)
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என ஊடகங்களில் செய்தி வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
 
நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்த  மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது
 
ஆனால் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்