அமித்ஷா சென்னை வருவது இதற்கு தானா... ரூ.67,378 கோடி ப்ளான்!!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (09:32 IST)
சென்னையில் நவம்பர் 21 ஆம் தேதி ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இதுவரை தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ பதவியை கூட பிடிக்காத பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.  
 
இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 21 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். சென்னை வரும் அமித்ஷாவுடன் பாஜகவினர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
மேலும், சென்னையில் நவம்பர் 21 ஆம் தேதி ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 
 
இதனுடன், கோவை - அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலை திட்டம், ரூ.61,843 கோடி மதிப்புள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்டம் பணி ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்