சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் சுற்றுலா தலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தடை என தமிழக அரசு அறிவித்திருந்தது இன்று முதல் அமல் படுத்தப் படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்றும் மூன்றாவது அறையை தடுப்பதற்காக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன
அதன்படி சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத் தலங்களுக்கு ஞாயிறன்று அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே வெள்ளி சனி ஞாயிறு வழிபாடு தளங்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனுமதி இல்லை என்றும் அது இன்று முதல் அமல் படுத்த படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் சென்னையில் இன்று மெரினாவில் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் மெரினாவுக்கு வரும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது