அப்பல்லோவில் ஜெ ; எய்ம்ஸ் மருத்துவர்கள் அடித்த கமெண்ட் : பகீர் தகவல்

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (15:43 IST)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளியே கசிந்து வருகிறது.


 

 
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் அணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.  
 
இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், சென்னை வந்து,  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ.விற்கு சில நாட்கள் சிகிச்சை அளித்தனர் 
 
எனவே, ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விபரங்களை அளிக்கும்படி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் தமிழக அரசு  கேட்டது. இதை ஏற்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மொத்தம் 5 அறிக்கைகளை இன்று தாக்கல் செய்துள்ளனர். டெல்லியில் இருந்த தமிழக அரசின் சுகாதாரத்துரை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் அந்த அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், டெல்லிக்கு கிளம்பி செல்லும் முன். ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை பற்றி கூறும் போது “Its  a secret service, not a medical service" (இது மருத்துவ சேவையில்லை. இது ரகசிய சேவை) என அங்கிருந்த மருத்துவர்களிடம் சிரித்துக்கொண்டே கமெண்ட் அடித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்