உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் - ஜெ.விடம் ஏன் கூறினார் மோடி?

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (15:22 IST)
உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஏற்கனவே பிரதமர் மோடி எச்சரிக்கை செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
உடல் நிலைக்குறைபாடு காரணமாக செப்.22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 75 நாட்களுக்கும் மேல் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் டிசம்பர் 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு, டிச. 5ம் தேதி மரணமடைந்தார்.
 
இந்நிலையியில், 2011ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் முதல்வராக மோடி இருந்த போது, ஜெ.விற்கு உதவி செய்ய அங்கிருந்து ஒரு நர்ஸ் பெண்மணியை அனுப்பியுள்ளார். ஆனால், அவர் போயஸ் கார்டன் வந்த சில மாதங்களிலேயே இங்கிருந்து அனுப்பப்பட்டார். அப்போது ஜெ.விடம் தொலைபேசியில் பேசிய மோடி “உங்களுக்கு அளிக்கப்படும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்” என ஜெ.விடம் அறிவுறுத்தியுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அவர் பொதுவாக அப்படி கூறினாரா அல்லது சில விவகாரங்கள் பற்றி தெரிந்த பின் அப்படி ஜெ.வை எச்சரித்தாரா என்பது பற்றி தெரியவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்