அதிமுக அவைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி....

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (23:33 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
 
இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீரென்று உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகிறது.
 
மேலும் செரிமான கோளாறு காரணமாக மதுசூதனன் அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் விரைவில் குணம்பெற வேண்டுமென அதிமுகவினர் பிரார்த்தித்துவருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்