சசிகலாவை அடுத்து மருத்துவமனையில் இருந்து இளவரசியும் டிஸ்சார்ஜ்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:22 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிந்ததே. இதன் பின்னர் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து அவர் பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இளவரசிக்கு தற்போது கொரோனா வைரஸ் குணம் ஆகி விட்டதாகவும் அவருக்கு சோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது
 
இதனை அடுத்து பெங்களூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த இளவரசி சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இளவரசி இன்னும் விடுதலை செய்யப்படாததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்