கமல் எம்ஜிஆரின் நீட்சியா? அதிமுகவினர் அப்செட்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:34 IST)
கமல்ஹாசனின் பேச்சுக்கு, அதிமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டமன்ற தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும்.
 
எம்.ஜி.ஆரும் நானும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சினிமாக்காரர்கள் என்ற இனத்தை சேர்ந்தவர்கள். மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். மக்கள் நீதி மய்யம் அதை செய்யும். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. தொகுதி குறித்து பின்னால் அறிவிக்கப்படும் என்று கூறினார். 
 
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு, அதிமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆரின் நீட்சி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிக் கொள்வது மாபெரும் தவறு என்றும் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்