அதிமுக, திமுக பேச்சாளர்கள் சாக்கடைகள் என பொருள்படும்படியாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது இரு கட்சியினரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தியுது.
பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளமான டுவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்படுபவர். பல்வேறு அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கம்மெண்ட் செய்து வருவார். சிந்திக்கும் விதமாகவும், நக்கலடிக்கும் விதமாகவும் இருக்கும் ராமதாஸின் டுவிட்டர் பதிவுகள்.
இந்நிலையில் தமிழகத்தில் தெருக்களில் சாக்கடை விடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு ராமதாஸ் அதிமுக, திமுக கட்சிகளை நக்கலடித்து மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளார்.
அதில், தெருக்களில் சாக்கடை விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்: தமிழக அரசு- அப்படியானால், அதிமுக, திமுக பேச்சாளர்களால் அரசுக்கு நல்ல வருமானம் தான் என பதிவிட்டுள்ள ராமதாஸ் அதிமுக, திமுக பேச்சாளர்கள் சாக்கடை என மறைமுகமாக தாக்கியுள்ளார்.