வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள், ரூ.4000 பணம்: திமுகவினர் மீது அதிமுக புகார்..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (13:45 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் கொடுப்பதாகவும் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 4000 பணம் கொடுப்பதாகவும் திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசைகள் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியண்ணா நகர் கலைமகள் வாக்குச்சாவடி அருகே திமுக அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்களை வழங்குவதாகவும் ஒரு சிலருக்கு 4,000 ரூபாய் ரொக்க பணம் வழங்குவதாகவும் திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை எடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி உள்ளனர். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதாகவும் வாக்காளர்களை மண்டபங்களை அடைத்து வைத்து ஆபாச நடனம், அண்டா, மளிகை பொருட்கள், கோழிக்கறி ஆகிவற்றை திமுகவினர் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்