நடுக்கடலில் கப்பல்! கண்டெய்னர் முழுவதும் கரன்ஸி: ஆட்டம் காணும் தொப்பி

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (04:12 IST)
சசிகலா ஜெயில், தினகரன் ஜெயில் என இதோடு மத்திய அரசு விடுவதாக இல்லையாம். சசிகலா அணியின் ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் கூண்டோடு உள்ளே தள்ள முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.



 


சமீபத்தில் ஒரு தொப்பி அணி நிர்வாகி பத்திரிகையாளர்களுக்கு நடுக்கத்துடன் கூறியது இதுதான்: சென்னை கடல் எல்லையில் பெரிய கப்பல் ஒன்று பழுதாகி நிற்பதாகவும்,. அந்தக் கப்பலில் புது இரண்டாயிரம் நோட்டுக் கட்டுகளைக் கொண்ட கன்டெய்னர்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பதாகவும், அந்தப் பணம் யாருடையது என்பதை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை டெல்லி மிரட்டுவதாகவும் கூறினார். இதனால் தொப்பி அணியினர் ஒட்டு மொத்தமாக காலியாக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நபர் கூறினாராம்..

கப்பல், கன்டெய்னர், கரன்சி போன்றவை மட்டுமின்றி இதே ஸ்டைலில் பல தகவல்களை அனுப்பி தினசரி அச்சத்தை கிளப்புவதாகவும் இதனால் எந்த நேரத்தில் கைதாவோம் என்ற பயத்தில் தூங்கவே முடியவில்லை என்று தொப்பி ஆதரவாளர்கள் சிலர் கதறுவதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்