காந்தியார் போல் இன்று நடந்தேன் : டிவிட்டரில் கூறிய கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (19:57 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி, அவரது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


 

 
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.  அதன் பின் அவர் ஓய்வில் இருந்தார்.
 
சில நாட்களுக்கு முன்பு விரைவில் எழுந்து நடப்பேன் என்று தனது ரசிகர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், அவரது காலில் மீண்டும் வலி ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ரசிகர்களுடனும் நண்பர்களுடனும்  பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார்  போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும்  முன்னேற்றம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்