ஏன் குழந்தை கருப்பா பொறந்துச்சு? டாச்சர் செய்த ஆசிரியர்; நார்நாரா கிழிச்ச மனைவி

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (15:46 IST)
தேனியில் குழந்தை ஏன் கருப்பாக இருக்கிறது என மனைவியை டார்ச்சர் செய்த ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
தேனியில் எல்லைத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். பிரபாகரன் ஒரு ஆசிரியர். இவரது மனைவி மனோஜா. இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
 
இந்நிலையில் பிறந்த குழந்தை கருப்பாக இருப்பதாக கூறி பிரபாகரனும் அவரது குடும்பத்தாரும் மனோஜாவை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். வரதட்சனையாக 3 லட்சம் கொடுக்காவிட்டால், என் மகனுக்கு வேறு திருமணம் செய்து வைத்துவிடுவேன் என அவரது மாமியார் மனோஜாவை மிரட்டியுள்ளார்.
 
பொறுத்து பொறுத்து பார்த்த மனோஜா, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் வரதட்சணை கொடுமை செய்த குற்றத்திற்காக பிரபாகரனையும் அவனது பெற்றோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்