நீட் எதிர்ப்பாக பேசியவர் பக்கா திமுக காரர்.. காட்டி கொடுத்த புகைப்படங்கள்..!

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (13:07 IST)
நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த கலந்துரையாடலில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பாக பேசியவர் பக்கா திமுக காரர் என்பது தற்போது சில புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 
 
ஆளுநர் மாளிகையில் நீட் தடை மசோதா  குறித்து ஒருவர் பரபரப்பாக பேசினார். அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் சன் டிவிக்கு பேட்டி அளித்த அவர்  நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தன்னுடைய மகள் எப்படி மெடிக்கல் சீட் பெற்றார் என்பது குறித்தும் ஆவேசமாக பேசினார். 
 
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு பக்க திமுக காரர் என்பது தெரிய வந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி சமாதி முன்னிலையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் திமுக நடத்திய போராட்டங்களில் அவர் கலந்து  கொண்ட புகைப்படம் ஆகியவை தற்போது வெளியே வந்துள்ளது. 
 
இதனை அடுத்து வேண்டுமென்றே அவர் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு போலியான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்