திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது, போலீஸாரை துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, போலீஸார் அவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். பலியான ஜாஃபர் குலாமின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்து, மும்பை செல்ல விமானத்தில் ஏறத் தயாராக இருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.