அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகைகள் செந்தில்பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது- முதல்வர்

சனி, 12 ஆகஸ்ட் 2023 (18:35 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவிசாரணைகளாக நாங்கள் பார்க்கவில்லை…அரசியல் விசாரணைகளாகவே பார்க்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் அவரது கைது சட்டவிரோதம் என நீதிமன்றத்தில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் கைது சரிதான் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவரை காவலில் எடுக்கவும் அனுமதி அளித்தது. இதனை அடுத்து செந்தில் பாலாஜி ஐந்து நாட்களுக்கு காவலில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்  அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தனர்.

இந்த விசாரணை அறிக்கையை மேலதிகாரிகளுக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஐந்து நாள் காவல் முடிவடையும் நிலையில் அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தினர். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க விசாரணை அமைப்புகளை வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘’பாஜக அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே அமலாக்கத்துறை நுழையும்.  பாஜகவில் அவர்கள் ஐக்கியமாகிவிட்டால் அவர்கள் புனிதமாகிவிடுவார்கள். இதைக் குற்றவிசாரணைகளாக நாங்கள் பார்க்கவில்லை…அரசியல் விசாரணைகளாகவே பார்க்கிறோம் என்றும்…..அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகைகள் செந்தில்பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது ‘’என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்