நீட் தேர்வு குறித்து ஆவேசமாக பேசிய மாணவியின் தந்தை.. பதிலடி கொடுத்து வரும் நெட்டிசன்கள் ..!

சனி, 12 ஆகஸ்ட் 2023 (18:36 IST)
இன்று கவர்னர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நீட் தேர்வு தடை மசோதாவுக்கு எப்போது அனுமதி அனுமதி அளிப்பீர்கள் என மாணவியின் தந்தை ஒருவர் கேட்டார். அதற்கு கவர்னர் நீட் தேர்வு தடை மசோதாவுக்கு அனுமதி தரமாட்டேன் என்று உறுதிப்பட கூறினார். 
 
இதனை அடுத்து கேள்வி கேட்ட நபர் இந்த கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்து ஒரு குறிப்பிட்ட ஊடகத்திற்கு மட்டும் பேட்டி அளித்து ஆவேசமாக பேசினார். நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவ மாணவிகளின் உரிமையை பறிக்கிறது என்றும் என்னுடைய மகளுக்கு நான் செலவு செய்து கோச்சிங் சென்டரில் சேர்த்து  எம்பிபிஎஸ் சீட் வாங்கி விட்டேன் என்றும் ஆனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறும் நிலை உள்ளது என்றும் கூறினார். 
 
அவரது இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறிய அரசியல்வாதிகளிடம் இந்த கேள்வியை அவர் ஏன் கேட்கவில்லை என்று கூறி வருகின்றனர். 
 
அதுமட்டுமின்றி நீட் தேர்வு வந்த பிறகுதான் டொனேஷன் என்ற ஒன்று இல்லாமல் மாணவர்கள் எம்பிபிஎஸ் சீட் பெற்று வருகின்றார்கள் என்றும்  இவர் தவறான தகவலை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 
 
நீட் தேர்வை தடை செய்ய வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் பொய்யான வாக்குறுதி கொடுத்த அரசிடம் இவர் எந்த கேள்வியும் கேட்காமல் கவர்னரிடம் கேள்வி கேட்பது முறையற்ற செயல் என்றும் நெட்டிசன்கள் இந்த நபருக்கு இந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்