இதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 315 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகள் உட்பட 133 காலியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, மே மாதத்திற்குள் இடைக்காலத் தேர்தல் நடத்த மாவட்ட அளவிலான தேர்தல் ஏற்பாடுகளை விரைவாக முடிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.