திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி - நண்பர்களோடு சேர்ந்து சீரழித்த காதலன்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (09:03 IST)
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன் காதலியை நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்து கொலை செய்துள்ளான்.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையத்தை சேர்ந்த குணசேகரனும் அதே பகுதியை சேர்ந்த அமராவதி என்ற பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
 
அமராவதி குணசேகரனிடம் தன்னை விரைவில் திருமணம் செய்யும் படி அவ்வப்போது வற்புறுத்தி வந்துள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளான் குணசேகரன்.
 
இந்நிலையில் கடந்த 28-ந் தேதி குணசேகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அப்போது தனது காதலியான அமராவதிக்கு போன் செய்து, திருமணம் செய்து கொள்வோம் வா என கூறியுள்ளான்.
 
இதனை நம்பிய அமராவதி குணசேகரனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த மனித மிருகம் குணசேகரன் அமராவதியை கற்பழித்துள்ளான். பின் அந்த அயோக்கியனின் நண்பர்களும் அமராவதியை சீரழித்து அவரை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
 
மகள் காணாமல் போனதால் அமராவதியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரித்து வந்த போலீஸார், கிணற்றில் வீசப்பட்ட அமராவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பின் அந்த அயோக்கியன் குணசேகரன் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்த போலீஸார் அவன்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்