வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் அதாவது அந்தமான் பகுதி அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது 23ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 23ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் தமிழகத்தை புயல் தாக்கி வரும் நிலையில் இந்த ஆண்டும் இந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை பாதிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.