200 ரூபாய காணோம்!! கர்ப்பிணி மனைவியை அடித்தே கொன்ற கணவன்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (10:51 IST)
கன்னியாகுமரியில் 200 ரூபாய்க்காக கணவன் கர்ப்பிணி மனைவியை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்தவன் மணிகண்டன். இவனது மனைவி சுபிதா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்பமானார். குடிப்பழக்கம் உள்ள மணிகண்டன் அவ்வப்போது மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். சமீபத்தில்மணிகண்டனின் டார்ச்சரால் அவரது தாய் தற்கொலை செய்துகொண்டார்.
 
இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த அவன் வீட்டில் தாம் வைத்திருந்த 200 ரூபாயை கானவில்லை என மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மணிகண்டன், மனைவியை அடித்தே கொலை செய்துள்ளான்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சுபிதாவின் உடலை மீட்டனர். மேலும் மணிகண்டனை கைது செய்த போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்