உருகி உருகி லவ் பண்ண மனைவிக்கு வளைகாப்பு: தூக்கில் தொங்கிய கணவன்; கதிகலங்க வைக்கும் காரணம்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (08:59 IST)
சென்னையில் மனைவிக்கு வளைகாப்பு நடந்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். பாலகிருஷ்ணன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் கடந்த ஒராண்டிற்கு முன்னர் சவுந்தர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருந்தது. சவுந்தர்யா கர்ப்பமானார். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார் பாலகிருஷ்ணன். மனைவியை தாங்கு தாங்குவென தாங்கினார் பாலகிருஷ்ணன். சமீபத்தில் மனைவி சவுந்தர்யாவிற்கு ஊர் மெச்சும் படியாக தடபுடலாக வளைகாப்பு நடத்தினார். வளைகாப்பை பாலகிருஷ்ணன் கடன் வாங்கி நடத்தியதாக தெரிகிறது.
 
ஏன் கடன் வாங்கி வளைகாப்பு நடத்துனீர்கள் என சவுந்தர்யா, கணவனிடன் சண்டைபோட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலகிருஷ்ணனின் இந்த செயல் அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்