ஓடும் ரயிலில் பெண்களுக்கு இடையே சண்டை... வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:09 IST)
மும்பை மின்சார ரயிலில் சண்டையில் ஈடுபட்ட விவகாரத்தில் ஒரு பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பை மின்சரா ரயிலில் இருக்கைக்காக பெண்கள் ஒரருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ பரவலாகி வருகிறது.

 
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மின்சார ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த புதன் கிழமை அன்று, தானேவில் இருந்து ஒரு மமின்சார ரயில் பன்வேல்  நோக்கி இரவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து  நிலையில், ஒரு கம்பார்ட்மெண்டில் ஆர்ஜு துவித்கான் என்ற பெண்ணும், 49 வயது பெண்ணும்  இருவரின் தோழிகளும் அருகில் பயணித்தபோது, இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்தச் சண்டையை விலக்க வந்த ஒரு காவலரும் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஒரு போலீஸ் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சண்டையில் ஈடுபட்ட ஒரு பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்