போச்சே!!! கஜாவால் வாழையெல்லாம் போச்சே.. வேதனையில் விவசாயி தற்கொலை

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2018 (10:22 IST)
கஜாவால் கதிகலங்கிப் போன டெல்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பேரதர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 100க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும், வாழை மரங்களும், பனை மரங்களும் வேரோடு சாய்துள்ளன. விவசாயிகள் கஷ்டப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கஜாவால் சீரழிந்து போயுள்ளன.
 
திருச்சி திருவானைக்காவல், மேலகொண்டையம்பேட்டை, வடக்கு தெருவை செல்வராஜ் (29) அந்த பகுதியில் 1½ ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டிருந்தார். கஜாவால் அவை அனைத்தும் நாசமாகின. இதனால் மனமுடைந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பமே பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்