சென்னை மருத்துவர் விஷமருந்தி தற்கொலை

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (07:32 IST)
சென்னையில் சிவநாதன் என்ற பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவரும் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சிவநாதன்(25) சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து, பின் அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் 2 நாள் விடுமுறையில் வீட்டிற்கு சென்ற சிவநாதன் விஷமருந்தினார். வெகு நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால், சிவநாதனின் பெற்றோர், அவரது அறைக்கு சென்று பார்த்த போது சிவநாதன் மயங்கிக் கிடந்தார்.
 
அதிர்ச்சியடைந்த அவர்கள், சிவநாதனை  சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
சிவநாதன் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்