திருமண பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம் - புதுமாப்பிள்ளை பலி

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (09:08 IST)
நாளை நடக்கவிருந்த திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்கச் சென்ற புதுமாப்பிள்ளை விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் யஷ்வந்த்(23). இவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்து வந்தார். யஷ்வந்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது.
 
இந்நிலையில் நேற்று யஷ்வந்த நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். நெமிலிச்சேரி அருகே சென்ற போது மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் யஷ்வந்த தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மகன் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் யஷ்வந்த்தின் நண்பர்களும், மணப்பெண் குடும்பத்தாரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்