பெண் போலீஸ் கையை முறித்த பெண் கஞ்சா வியாபாரி! – துப்பாக்கி முனையில் கைது!

Webdunia
புதன், 20 மே 2020 (09:15 IST)
கஞ்சா விற்பனை செய்த பெண்ணை கைது செய்ய சென்ற பெண் போலீஸின் கையை முறித்து விட்டு கஞ்சா வியாபாரி தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மகேஸ்வரி என்ற பெண் தன் குடும்பத்தினருடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அந்த பகுதிக்கு சோதனை செய்ய சென்றுள்ளனர். சோதனைக்கு சென்ற போலீஸாரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மகேஸ்வரி, ஒரு பெண் போலீஸின் கையையும் முறித்து விட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து துப்பாக்கி முனையில் மகேஸ்வரி மற்றும் 7 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

அவர்கள் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ கஞ்சா மற்றும் 20 லட்சரூபாய் அளவிலான பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மகேஸ்வரி மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சோதனைக்கு சென்ற காவலரின் கையை குற்றவாளி முறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்