கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசியதாகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அவமதித்ததாகவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம்.பி ஜோதிமணிக்கு ஆதரவாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் MP தங்கை ஜோதிமணிக்கெதிராக பாஜக கரு.நாகராஜன் தொடுத்த தனிநபர் தாக்குதலும் அருவருக்கத்தக்க அவதூறுகளும் அநாகரீகத்தின் உச்சம். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று இவ்வாறு தனிநபர் தாக்குதல் மூலம் இழித்துரைத்துப் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது!” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.