தங்கையை கற்பழிக்க கணவருக்கு உதவி செய்த அக்கா!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (14:55 IST)
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 9 சிறுமி ஒருவரை கற்பழிக்க தனது கணவருக்கும், அவரது நண்பர்களுக்கும் உதவியதாக அந்த சிறுமியின் அக்கா கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மரணமடைந்தனர். இதனையடுத்து அந்த சிறுமி தனது அக்கா மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் அக்கா கணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த சிறுமியை தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளனர்.
 
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் அளித்து சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். சில நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
 
அதில் கடந்த சில வாரங்களாக சிறுமி கற்பழிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது அக்கா கணவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
 
இதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இதற்கு சிறுமியின் அக்காவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் அக்கா, அவரது கணவர் மற்றும் ஒரு நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்