8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (13:58 IST)
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல். 

 
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. 
 
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்