இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழை காரணமாக இதுவரை இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டி நடந்த இரண்டு நாட்கள் கூட மழையால் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த போட்டி நடக்கும் பிட்ச் அமைப்புக் காரணமாக நியுசிலாந்து அணி சுழல்பந்து வீச்சாளர்களை அணியில் எடுக்கவில்லை. ஆனால் இந்தியா இரண்டு சுழலர்களை தேர்வு செய்தது.
இதுபற்றி பேசிய ஆஸி முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் ஒரு ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு வேலை செய்யும் என்றால் கண்டிப்பாக சுழல்பந்தும் வொர்க் அவுட் ஆகும் எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த ஒரு நெட்டிசன் துடுக்காக உங்களுக்கு ஸ்பின் எப்படி வேளை செய்யும் எனத் தெரியுமா? எனக் கேட்க பலரும் வார்னை கேலி செய்யும் விதமாக பதிவிட்டனர்.