தமிழக தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதத்தில் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையர் தகவல்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:28 IST)
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் 234 தொகுதி மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள் என்பதும் தெரிந்ததே. சென்னையில் வெயில் காரணமாகவும் மற்றும் சில காரணங்களாலும் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாக இருந்தாலும் தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் நல்ல வாக்குப்பதிவு இருந்தது
 
இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் தகவலை வெளியிட்டு இருந்தது. அதன்படி 72.78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு மறுநாள் காலை அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது 
 
இந்த நிலையில் தற்போது புதிய விவரம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது திடீரென 0.03 சதவிகிதம் வாக்குப்பதிவு அதிகரித்தது எப்படி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்