வெயில மறந்துருங்க மக்களே... கனமழை தொடரும் !!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (09:08 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
 
குறிப்பாக சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்தது. 
 
மேலும், நவம்பர் 17 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதைய அறிவிப்பின் படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் ஆகிய 6  மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்