5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

Prasanth Karthick
வியாழன், 9 ஜனவரி 2025 (12:22 IST)

புதுக்கோட்டையில் புதிதாக திறந்த உணவகத்தில் 5 பைசா கொடுத்தால் பிரியாணி என அறிவித்ததால் பலர் 5 பைசாவோடு கடையின் முன் குவிந்த சம்பவம் நடந்துள்ளது.

 

 

சமீபமாக உணவகங்கள், துணிக்கடைகள் போன்றவை புதிதாக திறக்கப்படும்போது மக்களை கவர்வதற்காகவும், விளம்பரத்திற்காகவும் கடை உரிமையாளர்கள் சில சலுகைகளை அறிவிக்கின்றனர். இதனால் மக்களும் அந்த கடைகளில் குவிவது வாடிக்கையாக உள்ளது.

 

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நிஜாம் காலணியில் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. உணவகத்தை விளம்பரம் செய்யும் விதமாக தொடக்க நாள் அன்று 5 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரியாணி பிரியர்கள் கடை திறக்கும் முன்பே 5 பைசாவுடன் கடை முன்பு திரண்டுள்ளனர்.

 

முதலில் வரும் 50 பேருக்கு மட்டுமே 5 பைசாவுக்கு பிரியாணி என கூறப்பட்டிருந்த நிலையில், உணவகத்தினர் வரிசையில் நின்ற முதல் 50 பேருக்கு டோக்கன் வழங்கி பிரியாணி வழங்கினர். மற்றவர்கள் ஏமாற்றத்தோடு 5 பைசாவுடன் திரும்பினர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்