400 மீட்பு படை, 4967 சிறப்பு முகாம்கள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:25 IST)
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். 
 
பருவமழையால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது என்றும் தமிழகம் முழுவதும் 400 பேரிடர் மீட்பு படைக்குழு மற்றும் 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அணை நிலவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 
 
மேலும் வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து அதற்கு ஏற்றவாறு மழை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்