45 வயது ஆசிரியை; ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த 25 வயது வாலிபன்!

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (19:29 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 45 வயதான தமிழ்ச்செல்வி என்ற ஆசிரியை 25 வயது வாலிபரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி அவருடன் உல்லாசமாக இருந்து தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
 
ஆசிரியை தமிழ்ச்செல்வின் கணவர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வாரம்தோறும் மார்க்கெட்டுக்கு செல்லும் ஆசிரியைக்கு அங்கிருந்த மணிவேல் என்ற 25 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியைக்கு தக்காளி வாங்கி வந்து கொடுக்கும் மணிவேல் அவருடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசிவந்துள்ளார்.
 
இரவில் மெஸ்ஸேஜ் அனுப்புவது, போன் பேசுவது என தொடர்ந்த இவர்கள் நட்பு, பார்க், தியேட்டர் என வளர்ந்தது. பார்ப்பதற்கு ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க, ஆசிரியை மாதிரி இல்லை என அவரது அழகை வர்ணித்து வந்துள்ளார் மணிவேல்.
 
மணிவேலின் இந்த ஆசை வார்த்தைகளால் மயங்கிய ஆசிரியை அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தனது சம்பளத்தின் பெரும் பணத்தை மணிவேலுக்காக செலவளித்து வந்துள்ளார். கையில் நிறைய பணம் வந்ததால் திக்குமுக்காடிய மணிவேல் இருவரும் உல்லாசமாக இருப்பதை புகைப்படம், வீடியோவாக எடுத்து வைத்து ஆசிரியை மிரட்ட தொடங்கியுள்ளான்.
 
8 லட்சம் ரூபாய் தனக்கு தரவில்லையென்றால் அந்த புகைப்படம், வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளான். மணிவேல் சொன்ன தேதிக்குள் ஆசிரியை தமிழ்ச்செல்வி அந்த பணத்தை கொடுக்காததால் அதனை இணையத்தில் வெளியிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டான் மணிவேல்.
 
இந்த விவகாரம் காட்டுத்தீ போல பரவ, ஆசிரியை தமிழ்ச்செல்வியை சஸ்பெண்ட் செய்து அனுப்பிவிட்டது கல்வித்துறை. இந்நிலையில் ஆசிரியையும் தலைமறைவாக அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்