பண்ருட்டியில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (12:46 IST)
கடலூரில் முந்திரி தோப்பில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டள்ளது அப்பகுதி மக்களை அர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் கார் ட்ரைவராக இருக்கிறார். இவரது மகன் அஸ்வின் (வயது 4). சிறுவன் அஸ்வின் இன்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் அடித்துக் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்தான்.
 
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் அந்த சிறுவனை அழைத்துச்சென்று அடித்து கொலை செய்துவிட்டு மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்