மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கோவை குற்றாலத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சுற்றுப்பயணிகள் குளிக்க தடை என்ற அறிவிப்பு காரணமாக சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை குற்றாலம் என்பது சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்குரிய ஒரு பகுதி என்பதும் குற்றாலம் போலவே இங்கும் நீர்வீழ்ச்சி இருப்பதை அடுத்து கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுப்பயணிகள் இங்கு வந்து குளிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் 12ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கோவை குற்றாலம் தற்காலிமாக மூடப்படுவதாக வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்
நாளை முதல் 3 நாட்கள் விடுமுறை என்பதால் கோவை குற்றாலத்தில் அதிக அளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது