பெட்ரோல் மீதான 3% வரி குறைப்பு !

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (23:20 IST)
புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  பெட்ரோல் மீதான  3% வரியைக் குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் என்றைக்கும் இல்லாத வகையில் சமீப நாட்களாக பெட்ரோல் விலை ரூ.100 -ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல் விலை ஏற்றம் அத்தியாச்வசியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்திற்குக் காரணமாகவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைப்பு செய்தது.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, பெட்ரோல் மீதான  3% வரியைக் குறைக்கவுள்ளதாக அறிவித்த நிலையில், இன்று புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் மீதான 35 வரியைக் குறைக்க ஆளுநர் சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்