இந்த விபத்து குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் முடிந்து மகளை அவருடைய கணவர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுத் திரும்பியபோது மணமகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் மணவீட்டாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் மரண செய்தி கேட்டு கதறி அழுத ஈஸ்வரிக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் அவருடைய உறவினர்கள் திகைத்து நின்ற காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவில் இருந்தது.