நான் இருக்கும்வரை அது நடக்காது என வினோதா கூற, திருஞானசம்பந்தம் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வினோதாவின் வாயில் எலி மருந்தை ஊற்றிக் கொல்ல முயன்றனர். வினோதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்குப் போராடிய வினோதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், திருஞானசம்பந்தத்தையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக் காதலியை திருமணம் செய்ய மனைவியை கணவன் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.